கழிவுநீரில் கலந்து வீணாகும் குடிநீர்

கழிவுநீரில் கலந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-05-12 10:51 GMT
ீரபாண்டி, 
திருப்பூர் முருகம்பாளையம் 41வது வார்டு முல்லை நகர் பகுதியில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு 4ம் மண்டலம் அலுவலகம் மூலமாக மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக முருகம்பாளையம் இருந்து இடுவம்பாளையம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலந்து வருகிறது. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே குளம் போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, பல மாதங்களாக இப்பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாக்கடையில் கலந்து வருகிறது. இது குறித்து மண்டல அலுவலகத்திலும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இடுவம்பாளையம், முருகம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன்பாக விரைந்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர். 

மேலும் செய்திகள்