பள்ளி மாணவர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

துவரங்குறிச்சி, மே.12-
துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் கிருஷ்ணன் (வயது 15). இந்த நிலையில் கடன் பிரச்சினை காரணமாக இவரை செட்டியப்பட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள், பச்சமுத்து ஆகியோரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையம்மாள், பச்சமுத்து ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே வெள்ளையம்மாள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் நேற்று பச்சமுத்து மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.