சேலைக்காரி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
விருதுநகர் அருகே சேலைக்காரி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே அப்பையநாயக்கன்பட்டியில் யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சேலைக்காரி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனைகளும் நடைபெற்றது. விழாவில் நேற்று ஏராளமான பெண்கள் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து ஊரை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.