போதை மாத்திரை கொடுத்தவர் கைது

போதை மாத்திரை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-10 18:10 GMT
மதுரை, 
மதுரை கோமஸ்பாளையத்தை சேர்ந்த முனியாண்டி மகன் மாரிமுத்து என்ற சிவா (வயது 21). இவர் மீது கரிமேடு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மாரிமுத்துவை போலீசார் வழக்கு விசாரணைக்காக மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு  அழைத்து வந்தனர். அப்போது கோர்ட்டு நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மாரிமுத்துவிடம் போதை மாத்திரை கொடுப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அந்த வாலிபரை பிடித்து அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மேலப்பொன்னகரம் 2-வது தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் சிந்தனை செல்வன் (18) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்