மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகையில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே கூட்டத்தில், மீனவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.