தளியில் பயிர்களை சேதப்படுத்திய யானைகள்

தளியில் பயிர்களை யானைகள் சேதப்படுத்தின.

Update: 2022-05-10 17:50 GMT
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள நெல்லுமார் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ், விவசாயி. இவரது விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வெள்ளரிக்காய், அவரைக்காய், சாமந்தி, பீன்ஸ் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயி கவலை அடைந்துள்ளார். விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்