அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-05-10 17:40 GMT
சங்கராபுரம், 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சங்கராபுரம் வட்ட கிளை சார்பில் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் காஞ்சனாமேரி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கல்யாணி, லட்சுமி, சந்திரா மேரி, வட்ட பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ரவி, ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட பொருளாளர் ரங்கநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயா  ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம், அரசு பொது மருத்துவமனை, தாலுகா அலுவலகம், கருவூல அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்