3 வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது
ராமநத்தம் அருகே 3 வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்
திட்டக்குடி அருகே உள்ள கொக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி மணிமேகலை, சேப்பெரும்மாள் மனைவி அருந்தவம், கிருஷ்ணன் மனைவி அலமேலு. இவர்கள் மூன்று பேரின் தோட்டமும் அருகே அருகே அமைந்துள்ளது. அங்கு அவர்கள் தனித்தனியாக வைக்கோல் போர் வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் 3 வைக்கோல்போர்களும் தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாராவது மர்ம நபர்கள் வைக்கோல் போருக்கு தீ வைத்தனரா? அல்லது மின் கசிவுகாரணமாக தீ விபத்து நடந்ததா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.