மயிலம் அருகே தாமிர கம்பிகள் திருட்டு

மயிலம் அருகே தாமிர கம்பிகள் திருடு போனது.

Update: 2022-05-10 17:24 GMT

மயிலம், 

மயிலம் அருகே அன்னம்புத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் மகன் எழிலரசன் (வயது 32). விவசாயி. இவரது  விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டாரில் இருந்த தாமிர கம்பிகள் திருடுபோனது. 

 இதேபோல், பக்கத்து நிலத்தை சேர்ந்த முனுசாமி மகன் பழனி, பாட்டையா மகன் குபேந்திரன் ஆகியோரது நிலத்தில் உள்ள மின்மோட்டாரிலும் தாமிர கம்பிகள் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்