சரியாக பராமரிக்காத 10 கிலோ ஐஸ்கிரீம் பறிமுதல்

வேலூரில் சரியாக பராமரிக்காத 10 கிலோ ஐஸ்கிரீம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-05-10 17:20 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும்படி உணவு பாதுகாப்புத்துறையினருக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் வேலூர் தொரப்பாடி, ஓட்டேரி மற்றும் காட்பாடியில் உள்ள ஷவர்மா கடைகளில்  திடீரென சோதனை மேற்கொண்டனர். 

இதில் சரியாக வேகவைக்காத மற்றும் முறையாக பராமரிக்காத இறைச்சி, கிரேவி, ஷவர்மா தயாரிப்பு பொருட்கள் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. ஒருகடையில் சரியான முறையில் குளிர்சாதன பெட்டியில் பராமரிக்காத 10 கிலோ ஐஸ்கிரீம் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டன. மேலும் சுகாதாரம் இன்றி இயங்கிய 2 கடைக்கு நோட்டீசும், ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டன. 

நேற்று வரை 60 கடைகளில் சோதனை நடத்தி உள்ளனர். இதில் 9 ஷவர்மா கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் உணவு தயாரிப்பு கூடங்கள் இருந்தன. அந்த கடைகளுக்கு அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 

அசைவ உணவுகளை நன்கு வேகவைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்