மேல்மலையனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

மேல்மலையனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-05-10 17:14 GMT

விழுப்புரம், 

மேல்மலையனூர் அடுத்துள்ள கெங்கபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில்  முறைகேடு நடந்துள்ளதாக கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேல்மலையனூரில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு ராதாகிருஷ்ணன், வட்ட செயலாளர் முருகன், வட்ட செயற்குழு உதயக்குமார், ஹரிஹரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். 


இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட உதவி திட்ட இயக்குனர் பொன்னம்பலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தம், அனந்தலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்