திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

குடவாசல் அருகே திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.;

Update: 2022-05-10 17:12 GMT
குடவாசல்;
குடவாசல் அருகே திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் 
திருக்கல்யாணம் நடந்தது. 
வீழிநாதசாமி கோவில்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருவீழிமிழலையில் பிரசித்தி பெற்ற வீழிநாதசாமி கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 61-வது தலமான இத்தலத்தில் மகாவிஷ்ணு, பிரமன், இந்திரன், வசிஷ்டர் ஆகியோர் இறைவனை வழிபட்டுள்ளனர். 
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோணா தொற்று காரணமாக சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த 4-ந் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கல்யாணம்
விழாவின் 6- ம் நாளான நேற்று கார்த்தியாயனி அம்பாள், கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கல்யாணசுந்தரேஸ்வரர் அம்பாளுக்கு திருமாங்கல்யத்தை சூட்டினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். திருவாடுதுறை ஆதீன 24-வது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். 
தேரோட்டம்
இந்த ஆலயத்தில் இறைவன் சம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும்   படிக்காசு வழங்கும் நினைவாக திருவாவடுதுறை ஆதீனம் மூத்த மற்றும் இளைய ஓதுவாரகளுக்கு  படிக்காசு மற்றும் பொற்கிழி வழங்கி அவர்களை வாழ்த்தினார். நாளை(வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்