கடையில் புகுந்த பாம்பு பிடிபட்டது

கடையில் புகுந்த பாம்பு பிடிப்பட்டது

Update: 2022-05-10 16:36 GMT
கொல்லங்கோடு:
ெகால்லங்கோடு அருகே உள்ள நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் பிரைட். இவர் அந்த பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். கடையையொட்டி உள்ள குடோனில் பிளாஸ்டிக் குழாய் உள்ளிட்ட ெபாருட்கள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் குழாயில் ஒரு விஷப்பாம்பு புகுந்திருந்தது. இதைபார்த்த கடை ஊழியர்கள் பாம்பு வெளியே தப்பி செல்லாத படி குழாயின் இரண்டு பக்கமும் வலையால் மூடினர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குழாயில் இருந்து பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது அது திடீரென தப்பி சென்றது. இதனால் சுற்றி நின்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். வனத்துறையினர் பாம்பு பிடி உபகரணங்கள் மூலம் பாம்பை பிடிக்க முயன்றபோது சுற்றி நின்றிருந்த இளைஞர்களில் ஒருவர் கையால் பாம்பை லாவகமாக பிடித்தார். அத்துடன் ஆபத்தை உணராது நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்தார். பின்பு சாக்கு பையில் போட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் பாம்பை பாதுகாப்பாக எடுத்து சென்று வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் நடைக்காவு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்