சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா
ஆழ்வார்குறிச்சி சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா நடந்தது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சியில் ராமநதி ஆற்றின் கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற காக்கும்பெருமாள் சாஸ்தா சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம்தோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையில் கொடைவிழா நடப்பது வழக்கம். அதன்படி கொடைவிழா நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் சிவனைந்தபெருமாள் பூஜையும், 8 மணிக்கு தெப்பக்குள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம், மதியம் 12 மணிக்கு பட்டாணிபாறையில் இருந்து பழம் எறிதல் வைபவமும் நடந்தது. பின்னர் உச்சிகால கொடையும் அன்னதானமும் நடந்தது.
மாலை 4.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், இரவு 12.30 மணிக்கு சாமக்கொடை, ஊட்டுகளம் அர்த்த சாமபூஜையும் நடந்தது. கொடை விழா ஏற்பாடுகளை காக்கும் பெருமாள் சாஸ்தா சுடலைமாடசுவாமி கோவில் வளர்ச்சி நலக்கமிட்டியினர் செய்திருந்தனர்.