16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தினர்.

16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தினர்

Update: 2022-05-10 16:06 GMT

கோவை

ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தினர்.

ஊக்கத்தொகை

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 37). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (35). 

இவர்கள் 2 பேரும் சேர்ந்து காளப்பட்டியில் தலைமை அலுவலகத்தை தொடங்கி யூடியூப் சேனல் மூலம் பொதுமக்களிடம் அறிமுகமாகி போரெக்ஸ் டிரேட் என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.


அதில் முதலீடு செய்தால் முதலீட்டு தொகையுடன் சேர்த்து மாதம் 8 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தார்.

 அதை நம்பி முதலீடு செய்த பலருக்கு பணத்தை திருப்பி தர வில்லை என்று கூறி கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது.

தம்பதி மீது வழக்கு

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ஒருவர், தான் முதலீடு செய்த ரூ.16 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில் விமல்குமார், அவருடைய மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-
முதலீடுகளை பெற்றனர்

விமல்குமார், ராஜேஸ்வரி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலி பெயரில் லண்டனில் ஆன்லைன் வர்த்தக நிறுவ னம் தொடங்கி உள்ளதாக கூறியும், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

 இதற்காக மாவட்டம் தோறும் அலுவலகம் தொடங்கி ஏஜெண்டுகளை நியமித்து உள்ளனர். அவர்கள் மூலம் அவ்வப்போது கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று உள்ளனர்.

முதலில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டியுடன், பணத்தை திரும்ப கொடுத்துள்ளனர். இதனால் பலரும் முதலீடு செய்து உள்ளனர். 

அதன்பிறகு முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை கொடுக்காமல ஏமாற்றி மோசடி செய்து உள்ளனர்.

5 இடங்களில் சோதனை

தற்போது ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள விமல்குமார், ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சுந்தராபுரத்தில் உள்ள விமல்குமாரின் வீடு, காளப்பட்டியில் உள்ள அலுவலகம், கோவைப்புதூரில் உள்ள ராஜேஸ்வரியின் பெற்றோர் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்