குன்னூர் அருகே மளிகை கடையில் புகுந்து கரடி அட்டகாசம்

குன்னூர் அருகே மளிகை கடையில் புகுந்து கரடி அட்டகாசம்

Update: 2022-05-10 15:07 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று ஜெகதளா கிராமத்தில் புகுந்தது. பின்னர் அந்தப்பகுதியில் உள்ள மளிகை கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அட்டகாசம் செய்தது. மேலும், அந்தப்பகுதியில் வீடுகளில் கதவையும் தட்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தனர். அப்போது கரடி நிற்பதை கண்டதும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப்பகுதியில் உலா வந்த கரடி சிறிது நேரத்திற்கு பிறகு தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த கரடி நடமாட்டம் அந்த பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்