மசினகுடி அருகே குப்பைத்தொட்டியில் கிடந்த உணவை தின்ற காட்டு யானை
மசினகுடி அருகே குப்பைத்தொட்டியில் கிடந்த உணவை தின்ற காட்டு யானை
ஊட்டி
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட மசினகுடி பகுதியில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக யானைகளுக்கு வனப்பகுதியில் சரியான தீவனம் கிடைக்காததால் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகின்றன. மசினகுடி வனப்பகுதியிலிருந்து இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் வந்த யானை ஒன்று மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, குப்பை தொட்டியில் கிடந்த உணவு கழிவுகளை உட்கொண்டது. யானை குப்பை கழிவுகளை தின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் யானையில் உடலுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் யானை உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே இந்த யானை கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.