தமிழ் தேர்வு மிக எளிதாக இருந்தது என்று பிளஸ் 1 மாணவ மாணவிகள் கருத்து
தமிழ் தேர்வு மிக எளிதாக இருந்தது என்று பிளஸ் 1 மாணவ மாணவிகள் கருத்து
திருப்பூர்
தமிழ் தேர்வு மிக எளிதாக இருந்தது என்று பிளஸ்-1 மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
மிக எளிது
பிளஸ்-1 மொழிப்பாட தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகள் வினாத்தாள் எவ்வாறு இருந்தது என்பது குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மாணவி திவிஸ்:-
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நாங்கள் எழுதவில்லை. இதனால் முதன்முறையாக பொதுத்தேர்வு எழுத சென்றபோது பயம் இருந்தது. வினாத்தாளை பார்த்ததும் பயம் நீங்கியது. எளிதாகவே இருந்தது. 1 மதிப்பெண், 6 மதிப்பெண் வினாக்கள் மிக எளிதாக இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும்.
மாணவி வெண்ணிலா:-
பாடப்புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. மிகவும் எளிதாக கேள்விகள் இருந்ததால் அனைத்து வினாக்களுக்கும் பதில் அளித்து விட்டேன். திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களில் பெரும்பாலானவை இந்த பொதுத்தேர்வில் கேட்கப்பட்டதால் பதில் அளிக்க முடிந்தது. 10 மதிப்பெண் செய்முறை தேர்வு மூலம் அளிக்கப்படுகிறது. 90 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினேன். 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
உத்வேகம்
மாணவி விவேகலட்சுமி:-
தமிழ் தேர்வு மிகமிக எளிதாக இருந்தது. இதுபோல் அனைத்து தேர்வுகளும் அமைந்து விட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். விடைகளை எழுதுவதற்கு போதுமான கால அவகாசம் இருந்தது. முதல்முறையாக பொதுத்தேர்வை எதிர்கொள்கிறோம் என்ற பயம் இருந்தது. எளிதாக இருந்ததால் அந்த பயம் நீங்கியது. அடுத்த தேர்வையும் பயமின்றி எதிர்க்கொள்ள உத்வேகம் கிடைத்துள்ளது.
மாணவி ஆப்ரின் ரோஸ்:-
90-க்கு 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் அனைத்து யூனிட்டுகளில் இருந்தும் கேள்விகள் பரவலாக கேட்கப்பட்டு இருந்தது. எதையும் ஒதுக்கி வைத்து படித்தால் மதிப்பெண்களை இழக்க வேண்டியதிருக்கும். அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் வினாத்தாள் அமைந்திருந்தது.
மாணவி ஜெசி:-
தமிழ் தேர்வு மிக எளிதாக அமைந்தது. முதல்முறையாக பொதுத்தேர்வை எழுதிய எனக்கு பயத்தை நீக்கி இருக்கிறது. அடுத்தடுத்த தேர்வையும் பயமில்லாமல் எதிர்கொள்ள தைரியம் கிடைத்துள்ளது. திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் பெரும்பாலானவை வந்திருந்தது. 85 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஏமாற்றம்
மாணவர் ராஜா முகமது:-
1 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. திருக்குறள் வினாவுக்கு பதில் அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எளிதாகவே வினாக்கள் அமைந்தது. எளிதில் தேர்ச்சி பெற்று விடுவேன்.
மாணவர் சுகேல் அகமது:-
திருப்புதல் தேர்வில் இருந்து சில வினாக்கள் வந்தது. எதிர்பார்த்த வினாக்கள் வரவில்லை. அதனால் கொஞ்சம் ஏமாற்றம் தான். படிக்காமல் சென்றால் தேர்ச்சி பெறுவது சிரமம் தான். நான் தேர்ச்சி பெற்று விடுவேன்.
மாணவர் அனுஸ் அகமது:-
1 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. முதல் பொதுத்தேர்வை எழுதுவதால் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. வினாத்தாளை பார்த்ததும் எளிதாக இருந்ததால் நிம்மதி அடைந்தேன். தெரிந்த வினாக்களுக்கு பதில் அளித்தேன். நல்ல மதிப்பெண் கிடைக்