ரூ.6 லட்சம் வருமான வரி ஏய்ப்பு வழக்கில், பெட்ரோல் பங்க் பெண் உரிமையாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

ரூ.6 லட்சம் வருமான வரி ஏய்ப்பு வழக்கில், பெட்ரோல் பங்க் பெண் உரிமையாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

Update: 2022-05-10 13:49 GMT

கோவை

ரூ.6 லட்சம் வருமான வரி ஏய்ப்பு வழக்கில், பெட்ரோல் பங்க் பெண் உரிமையாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

 வருமான வரி ஏய்ப்பு

கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் கவிதா (வயது37). இவர் சிறுவாணி மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். 

இவர், கடந்த 2008-2009-ம் ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தார். 

அதில், விவசாய தொழில் மூலம் ரூ.6 லட்சம் வருமானம் வந்ததாக வருமான வரி கணக்கில் குறிப்பிட்டு இருந்தார். 

அதை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கவிதா விவசாய தொழில் மூலம் ரூ.6 லட்சம் வருமானத்தை ஈட்ட வில்லை என்பது உறுதியானது.

3 மாதம் சிறை

இதைத்தொடர்ந்து கவிதா மீது, வருமான வரி ஏய்ப்பு சட்ட விதிகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 3-வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. 

வழக்கை விசாரித்த நீதிபதி, கவிதாவுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

மேலும் செய்திகள்