விளாத்திகுளம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
விளாத்திகுளம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே கந்தசாமிபுரத்தை சேர்ந்த ராமசாமி மனைவி வையம்மாள் (வயது 80). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வையம்மாள் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து வையம்மாளின் மகன் சுப்புராஜ் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமரய்யன் மகன் பார்த்தசாரதி (38) என்பவர் வையம்மாளிடம் தங்க நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்தார்.