மெயின் வழித்தடத்தில் கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை- அதிகாரி தகவல்

மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில், கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

Update: 2022-05-10 13:27 GMT
கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை
மும்பை, 
  மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில், கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
பயணிகள் அதிகரிப்பு
  மத்திய ரெயில்வேயில் மெயின் வழித்தடத்தில், தினந்தோறும் 44 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி.- பன்வெல், சி.எஸ்.எம்.டி.- கோரேகாவ் இடையே தலா 8 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
  இந்நிலையில், சமீபத்தில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, மெயின் வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
  கடந்த ஏப்ரலில் மெயின் வழித்தடத்தில், சராசாியாக ஒரு ஏ.சி. ரெயிலில் 397 பேர் மட்டும் பயணம் செய்தனர். இந்த எண்ணிக்கை மே மாதம் 565 ஆக சற்று அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில், துறைமுக வழித்தடத்தில் 143-ல் இருந்து 206 ஆக கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
கூடுதல் சேவைகள்
  எனவே, துறைமுக வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏ.சி. மின்சார ரெயில்களையும் மெயின் வழித்தடத்தில் இயக்க, மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது. 
  இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், விரைவில் மெயின் வழித்தடத்தில் கூடுதலாக 10 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் அறிமுகம் செய்யப்படலாம் என்று அறிவித்துள்ளார்.
-----

மேலும் செய்திகள்