காரில் பதுக்கிய 26 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
போடியில் காரில் பதுக்கிய 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி:
போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் உத்தரவின் பேரில் தேனி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் இன்றுகாலை போடி பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் இரண்டு மூட்டைகளில் சுமார் 26 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த போடியை சேர்ந்த விஜயன்(வயது 50), பாலமுருகன்(35)், கருப்பையா(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தனர், இதில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.