சோதனை செய்ய சென்ற போலீஸ்காரர்களை குடோனுக்குள் வைத்து பூட்டிய 2 பேர் கைது
போலீஸ்காரர்களை குடோனுக்குள் வைத்து பூட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
போலீஸ்காரர்களை குடோனுக்குள் வைத்து பூட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடோனுக்குள் போட்டு பூட்டினர்
கல்யாண் பகுதியில் பழைய பொருள் வியாபாரிகள் திருடப்பட்ட ரெயில் தண்டவாள இரும்பை, பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மகாத்மா புலே சவுக் போலீஸ்காரர்கள் 2 பேர் சம்மந்தப்பட்ட பழைய பொருள் குடோனுக்கு சோதனை செய்ய சென்றனர்.
அப்போது, பழைய பொருட்களுக்கு அடியில் ரெயில் தண்டவாள இரும்பு கம்பிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், பழைய பொருள் வியாபாரிகள், போலீசாரை குடோனுக்குள் வைத்து பூட்டினர்.
மீட்பு
இதுகுறித்து, போலீசார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் சுமார் ½ மணி நேரத்திற்கு பிறகு, குடோனில் வைத்து பூட்டப்பட்ட 2 போலீஸ்காரர்களை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பழைய பொருள் வியாபாரிகள் சவுகத் சேக், இசாக் பாக்வான் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், குடோனில் திருட்டு தண்டவாள இரும்பு கம்பிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறித்து, போலீசார் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
-----