தினசரி மார்க்கெட்டில் கட்டண வசூல் விவகாரம் தி.மு.க.- பா.ம.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்

தினசரி மார்க்கெட்டில் கட்டண வசூல் விவகாரம் தொடர்பாக தி.மு.க.- பா.ம.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தாரமங்கலம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-09 22:15 GMT
தாரமங்கலம்,
நகராட்சி கூட்டம்
தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் மங்கையர்கரசன், துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வார்டாக சுகாதார பணி மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாக்குவாதம்
கூட்டத்தில் தினசரி மார்க்கெட் நுழைவு வசூல் கூடுதலாக பெறப்பட்டு வருகிறது. அதனை கண்காணித்து ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1. 3-வது வார்டு பா.ம.க. கவுன்சி்லர்கள் பழனிசாமி, குமரேசன் ஆகியோர் வலியுறுத்தினர். அதற்கு 24-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மைசூர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஒப்பந்ததார்களுக்கு கட்டண தொகையை தற்போதைய நிலைக்கு தகுந்தவாறு உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்றார்.
அப்போது பழனிசாமிக்கும், மைசூருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை நகராட்சி தலைவர் குணசேகரன் சமாதானப்படுத்தியதுடன், ஒப்பந்ததாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்