செலுத்திய சேமிப்பு பணத்தை திரும்ப கேட்டு தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் வாழப்பாடியில் பரபரப்பு

செலுத்திய சேமிப்பு பணத்தை திரும்ப கேட்டு தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் வாழப்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-09 22:15 GMT
வாழப்பாடி, 
தனியார் நிறுவனம்
சேலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனம் மக்களிடம் சேமிப்பு பணத்தை பெற்று 6 மாதம் அல்லது குறிப்பிட்ட ஆண்டு முடிவில் வட்டியுடன் முதிர்வு தொகையை வழங்கி வருகிறது. இந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிளை ஒன்று சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ளது. அந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களாக மக்களிடம் வாங்கிய சேமிப்பு பணத்தை திரும்ப கொடுக்கவில்லை எனவும், ஒரு வாரமாக பூட்டியே கிடந்ததாகவும் தெரிகிறது.
பொதுமக்கள் முற்றுகை
நேற்று அந்த நிறுவனத்தை ஊழியர்கள் திறந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு ஊழியர்களிடம், தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப தருமாறு கேட்டு முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம், இது தொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க சொல்லி  அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வாழப்பாடியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிறுவனத்தில் இங்கு போன்று மற்ற இடங்களிலும் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்