வாலிபருடன் நடிகை ரம்யாவுக்கு காதலா?

நடிகை ரம்யா வாலிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Update: 2022-05-09 21:46 GMT
பெங்களூரு:

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாகவும் இவர் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் அரசியலில் இருந்தும், திரைப்படங்களில் நடிப்பதில் இருந்தும் ரம்யா சிறிது காலம் ஒதுங்கி உள்ளார். மேலும் அவ்வப்போது அரசியல் குறித்த கருத்துகளை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டும் வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பட வெளியீட்டு விழா, விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் ரம்யா கலந்து கொண்டார். இதனால் மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

  இந்த நிலையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த வாலிபர் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். அந்த வாலிபரின் பெயர் கரண் என்பது தெரியவந்து உள்ளது. ஆனால் அந்த வாலிபருக்கும், ரம்யாவுக்கும் என்ன உறவு என்பது தெரியவில்லை. அவர்கள் 2 பேரும் காதலிப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

மேலும் செய்திகள்