பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.;
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் இணைந்து நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறிய தமிழக நிதி அமைச்சரை கண்டித்தும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.