மதுரை
இலங்கை தமிழர் நலனுக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டு உள்ளார். இதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 2-ம் வகுப்பு மாணவன் சுதர்சன் தனது உண்டியல் சேமிப்பு தொகை ரூ.611 மற்றும் தனது தந்தையின் ஒரு நாள் கூலி தொகை ரூ.600 என சேர்த்து மொத்தம் ரூ.1,211 நிதியினை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு கலெக்டர் அனிஷ் சேகரிடம் வழங்கினார்.