விருதுநகர்,
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க மண்டலத்தலைவர் உமாபதி, செயலாளர் குரு சந்திரன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச்செயலாளர் ஆவின் செல்வம், கிழக்கு மாவட்ட செயலாளர் வீரேசன், மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் பேசினர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மண்டல பொருளாளர் முத்தியால்ராஜ் நன்றி கூறினார்.