நெல்லையில் மறியலுக்கு முயன்ற அரசு பணியாளர் சங்கத்தினர் 70 பேர் கைது

நெல்லையில் மறியலுக்கு முயன்ற அரசுப் பணியாளர் சங்கத்தினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-09 19:39 GMT
நெல்லை:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழுவினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்தல் வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர ஊதிய விகிதம் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயச்சந்திரன் ராஜா தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். உடனே அவர்களை அங்கு நின்ற போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்