சிவகாசியில் 11 ‘ஏர்ஹாரன்கள்’ பறிமுதல்
சிவகாசியில் 11 ஏர்ஹாரன்களை போக்குவத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி,
பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், ஒலி மாசுவையும் ஏற்படுத்தும் ‘ஏர்ஹாரன்களை’ பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயன், சிவகாசி போக்குவரத்து கழக கிளை மேலாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் சிவகாசி பஸ் நிலையத்தில் நேற்று மாலை திடீர் சோதனை செய்தனர். 21 பஸ்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 11 பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டது. தெடர்ந்து ஏர்ஹாரன் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.