குடியிருப்பு பகுதியில் திடீர் தீ
குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது;
தென்காசி:
தென்காசி கூலக்கடை பஜார் அருகில் நேற்று இரவு சுமார் 8 மணிக்கு தைக்கா தெரு பகுதியில் ஒரு காலி இடத்தில் திடீரென குப்பைகள் மற்றும் செடிகள் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக அதிக புகை வெளியேறியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நீண்ட நேரமாக இந்த தீ எரிந்து பின்னர் தானாகவே அணைந்துவிட்டது.