1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Update: 2022-05-09 18:55 GMT
நீடாமங்கலம், மே.10-
நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
ரெயில்வ கேட் மூடப்பட்டது
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே கேட் நேற்று காலை சுமார் 5.30 மணிக்கு மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து காலிபெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் வந்தது. பின்னர் சரக்கு ெரயில் என்ஜின் திசைமாற்றும் பணி நடந்தது. இதையடுத்து
மன்னார்குடியிலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நீடாமங்கலத்துக்கு வந்து சென்றது. இதைத்தொடர்ந்து என்ஜின் திசைமாற்றப்பட்ட சரக்கு ரயில் மன்னார்குடி நோக்கி சென்றது.
பயணிகள் அவதி
இந்த பணிகள் முடிவடையும் வரை ரயில்வே கேட் மூடப் பட்டிருந்ததால் சாலையின் இருபுறமும் பஸ்கள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.. காலை 6.27 மணிக்கு ரயில்வே கேட் திறந்த பிறகு வாகனங்கள் புறப்பட்டு சென்றன. 1 மணி நேரம் ரெயில் கேட் மூடப்பட்டு இருந்ததால்  பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். 
நீடாமங்கலம் நகரில் அடிக்கடி ஏற்படும் இந்த போக்குவரத்து நெருக்கடியை போக்க நீடாமங்கலம் மேம்பால பணிகளை தொடங்கிட வேண்டும். தஞ்சை முதல் நாகை வரையிலான இருவழிச்சாலை பணிகளை துரிதமாக நிறைவேற்ற வேண்டும்.
பழையநீடாமங்கலம் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம், பூவனூர் தட்டி பகுதியில் கோரையாற்றின் குறுக்கே கட்டப்படும் பாலப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்