அறந்தாங்கி:
அறந்தாங்கி களப்பகாட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 75). இவரது குடிசையில் நேற்று மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து வீட்டில் தீ பிடித்ததை பார்த்த சுப்பிரமணி வீட்டிற்கு உள்ளே சென்று பொருட்களை எடுக்க முயற்சி செய்தபோது அவருக்கு தீ காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து அறந்தாங்கி வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.