திருமயம்:
திருமயம் அருகே தேக்காட்டூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், தனது மோட்டார் சைக்கிளை தேக்காட்டூர் கண்மாய் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதேபோல் தே.பூவம்பட்டியை சேர்ந்த அய்யாசாமி அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து 2 பேரும் கொடுத்த புகாரின் பேரில், நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.