இரணியல், ஆளூர் ரெயில் நிலையங்களில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

இரணியல், ஆளூர் ரெயில் நிலையங்களில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.

Update: 2022-05-09 18:19 GMT
நாகர்கோவில், 
இரணியல், ஆளூர் ரெயில் நிலையங்களில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.
எம்.பி. ஆய்வு
இரணியல் ரெயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி.ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரட்டை வழிபாதை பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது ெரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று பயணிகள் விஜய் வசந்த் எம்.பி.யிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கும்படி அங்கிருந்த அதிகாரிகளிடம் விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார். மேலும் ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
பிறகு வீராணி ஆளூர் ெரயில் நிலையத்திலும் அவர் ஆய்வு செய்தார். அப்போது பயணிகள், ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்