தக்கலை அருகே அம்மன் கோவிலில் நகை திருட்டு

தக்கலை அருகே அம்மன் கோவிலில் நகை திருட்டு போனது.;

Update: 2022-05-09 18:04 GMT
தக்கலை, 
தக்கலை அருகே அம்மன் கோவிலில் நகை திருட்டு போனது.
நகை திருட்டு
தக்கலை அருகே உள்ள பரைக்கோடு உம்மச்சன்விளையில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தபின்பு கோவில் கதவை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலையில் கோவிலுக்கு வந்தவர்கள் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அம்மன் சிலையில் கழுத்தில் கிடந்த 2 பவுன் எடை கொண்ட 2 தங்க சங்கிலிகள் மாயமாகி இருந்தது.  இரவில் யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து நகைகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோவில் கமிட்டி தலைவர் குமரேசன் தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்