தச்சூர் பாரதி மகளிர் கல்லூரியில் 1,500 பேருக்கு பட்டம்
தச்சூர் பாரதி மகளிர் கல்லூரியில் 1,500 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமாக செயல்படும் தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் செயலாளர் லட்சுமிகந்தசாமி தலைமை தாங்கினார். தாளாளர் கந்தசாமி, ஆக்ஸாலிஸ் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி பாரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுபா வரவேற்றார். விழாவில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முதுகலை மற்றும் இளங்கலை படிப்பு முடித்த 1500 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர். விழாவில் கல்லூரி துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.