அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாட்டறம்பள்ளியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், புதிய ஓய்வூதிய ரத்து செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் ென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என அறிவித்த நிதி அமைச்சரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.