திருமணமான 6 மாதத்தில் வாலிபர் மாயம்
உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 6 மாதத்தில் வாலிபர் மாயமானாா்.;
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மகன் உத்திரவேல்(வயது 28). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் உத்திரவேல், பண்ருட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் அவரது மனைவி கண்ணீர் வடித்தனர். இது குறித்து ஹெரிகிருஷ்ணன் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு சென்ற உத்திரவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.