வீடுகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
வாணியம்பாடி அருகே வீடுகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், பிடிக்க வந்தவர்களை மிட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே வீடுகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், பிடிக்க வந்தவர்களை மிட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வீடுபுகுந்து திருட்டு
வாணியம்பாடியை அடுத்த எக்லாஸ்புரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மனோர்மணியம் (வயது 72), சுந்தரமூர்த்தி (65). இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளது. வயதான இருவரும் தங்கள் வீடுகளில் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதியவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் இவர்கள் இருவரின் வீடுகளிலும் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்துள்ளனர். அவர்கள் வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து திருடமுயற்சி செய்துள்ளனர். மனோர்மணியம் வீட்டில் ரூ.5 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. அதை எடுத்துக்கொண்டு மேலும் எங்காவது பணம் உள்ளதா என்று தேடி உள்ளனர்.
மிரட்டிவிட்டு சென்றனர்
இவர்கள் நடமாடுவதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். உடனே அவர்கள் கூச்சலிட்டனர். மேலும் திருடர்களை பிடிக்க வந்தனர். ஆனால் திருடர்கள், அவர்களை மிரட்டியபடியே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கடந்த வருடமும் இதேநாளில் மனோர்மணியம் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஆம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.