ஆர்.கே.எஸ்.கல்லூரியில் கருத்தரங்கம்
இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் சொத்து மதிப்பீடு மாதிரி ஒரு கண்ணோட்டம் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜி, முதல்வர் மோகனசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறைத்தலைவர் அருள் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சொத்துகள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகின்றன, எவையெல்லாம் சொத்துக்கள் என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன, வேலை வாய்ப்பு எவ்வகையில் உள்ளன என்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்க அறிக்கையை பேராசிரியர் ராஜா வாசித்தார். சிறப்பு விருந்தினர் அனந்தராமன் அறிமுக உரை நிகழ்த்தினார். கருத்தரங்கில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தலைவாசல் ஆகிய கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை உதவி பேராசிரியர் ராஜேஸ்வரி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் உதவி பேராசிரியர் சுபஷினி நன்றி கூறினார்.