அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பரங்கிப்பேட்டை, விருத்தாசலத்தில் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை வட்டார சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. இதற்கு முன்னாள் ஒன்றிய தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வீனர் செல்வராஜ் வரவேற்றார். குறைந்தபட்ச ஊதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், குடும்பநல நிதி ஒதுக்க வேண்டும், மருத்துவப்படி கொடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ஜீவா, பன்னீர்செல்வம், சீனு சிகாமணி, சண்முகம், குணா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அங்கன்வாடிமுன்னாள் ஊழியர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
விருத்தாசலம்
இதேபோல் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். ராமலிங்கம், பச்சமுத்து, பிச்சையம்மாள், மாலா, பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர்கள் தங்கவேல், கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் கேசவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கன்வீனர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ,7850 வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கணபதி, கணேசன், மணிமேகலை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.