நன்செய் இடையாற்றில் மாட்டுவண்டி மணல் குவாரியை திறக்க வேண்டும்-கலெக்டரிடம் மனு

நன்செய் இடையாற்றில் மாட்டுவண்டி மணல் குவாரியை திறக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-05-09 17:37 GMT
நாமக்கல்:
நன்செய் இடையாறு உழவர் மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்கம் சார்பில் நேற்று நாமக்கல்லில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மோகனூர் தாலுகா நன்செய் இடையாற்றில் மாட்டுவண்டி குவாரியை செயல்படுத்துவதற்கு அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளது. எனவே மாட்டுவண்டி தொழிலாளர் நலன்கருதி, விரைவில் மணல் குவாரியை திறந்து தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.
தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கோத்தான்குடியில் மாட்டுவண்டி மணல்குமாரி செயல்படுவதை போன்று, நன்செய் இடையாற்றிலும் மாட்டுவண்டி மணல் குவாரி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்