நாமக்கல்லில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-05-09 17:37 GMT
நாமக்கல்:
பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் சொந்த வீடோ, நிலமோ இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சித்ரா தலைமை தாங்கினார்.
இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் புகழேந்தி, இடது தொழிற்சங்க மையம் பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்