தேனீக்கள் கடித்து முதியவர் சாவு

திருத்துறைப்பூண்டி அருகே தேனீக்கள் கடித்து முதியவர் உயிரிழந்தார்.

Update: 2022-05-09 17:36 GMT
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே தேனீக்கள் கடித்து முதியவர் உயிரிழந்தார். 
ஓட்டல் ஊழியர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீரக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது70). திருமணமாகாத இவர் மன்னார்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தாா். நேற்று கோவிந்தராஜ் கீரக்களூர் பகுதியில் உள்ள அவரது சகோதரர் ராமாமிர்தம் வீட்டுக்கு வந்தார். 
தேனீக்கள் கடித்தன
அப்போது கீரக்களூர் மெயின் ரோட்டில் உள்ள நாவல் மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் பறந்து வந்து கோவிந்தராஜை கடித்தன. இதில் நிலைகுலைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை அலிவலம் போலீசார் கைப்பற்றி   விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்