அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டி,
திருவாடானையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட கிளை தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட தலைவர் முருகேசுவரி, மாவட்ட துணைத் தலைவர் தாசில்தார் செந்தில்வேல் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் துணை தாசில்தார்கள் ஜஸ்டின் பெர்னாண்டோ, கருப்பையா, வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டக்கிளை நிர்வாகி அமுதன் நன்றி கூறினார்.