வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்கம் சார்பில் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வருவாய்த்துறை மாவட்ட துணைச்செயலாளர் அருள்மொழிவர்மன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளர் பாண்டியன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் திருமால் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் இணைச் செயலாளர் விசுவநாதன் நன்றி கூறினார்.