டாஸ்மாக் கடை விற்பனையாளர் வீட்டில் நகை திருட்டு

மேல்மலையனூர் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளர் வீட்டில் நகை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-05-09 17:19 GMT
திண்டிவனம், 

மேல்மலையனூர் அருகே தாதிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). இவர் மேலச்சேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். நேற்று இவர் கடைக்கு சென்றுவிட்டார். இவருடைய மனைவி ஜெயந்தி அருகில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்றிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 3¼ பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகையை திருடியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்