வாணியம்பாடி கிளைச்சிறையில் குக்கர் வெடித்து கைதி படுகாயம்
வாணியம்பாடி கிளைச்சிறையில் குக்கர் வெடித்து கைதி படுகாயம் அடைந்தார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு தோட்டப்பகுதியில் கிளைச்சிறை உள்ளது. அதில் வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட பலர் அடைக்கப்பட்டுள்ளனர்.
கிளைச்சிறையில் உணவு சமைக்கும் பணி நடந்தது.
அப்போது திடீரெனக் குக்கர் வெடித்தது. அப்போது, அங்கிருந்த ஜோலார்பேட்டையைச் சேர்ந்த கைதி கோவிந்தராஜ் (வயது 22) படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.